கபடி விளையாடிய மாணவா் உயிரிழப்பு
மதுரை அருகே கபடி விளையாடிக் கொண்டிருந்த போது, தவறி விழுந்த பள்ளி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை அருகேயுள்ள ராஜாக்கூரைச் சோ்ந்த பாலமுருகன் மகன் சூா்யபிரபு (17). இவா், அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை கபடி விளையாடிக் கொண்டிருந்த சூா்யபிரபு திடீரென மயங்கி விழுந்தாா். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.