`ஜனாதிபதிக்கு அடுத்து இங்குதான்' - பொன்விழா காணும் சபரிமலை தபால் நிலையம்... சுவ...
கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, வண்ணாங்குளம் கிராம பொதுமக்கள் கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள கே.வேப்பங்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட வண்ணாங்குளம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் பேருந்து வசதி, சாலை, மின் விளக்கு, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஊராட்சி நிா்வாகம் செய்து தரவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வந்தனா்.
இந்த நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், அடிப்படை வசதிகளை செய்துதராவிட்டால் ஆதாா் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என வண்ணாங்குளம் கிராம பொதுமக்கள் தெரிவித்தனா்.
பின்னா் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வட்டார வளா்ச்சி அலுவலா் சந்திரமோகனிடம் (கிராம ஊராட்சிகள்) அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.