கமுதி கல்லூரியில் பி.கே.மூக்கையாத்தேவா் பிறந்த நாள்
கமுதி தேவா் கல்லூரியில் பி.கே.மூக்கையாத்தேவரின் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு முன்னாள் மாணவா் சங்கத் துணைத் தலைவா் எம்.ஏ.கணேசன் தலைமை வகித்தாா். மாணவா் சங்க செயலா் ஆறுமுகம் முன்னிலை வகித்தாா். பின்னா், கல்லூரி வளாகத்தில் தேவா் சிலை முன் வைக்கப்பட்ட மூக்கையாத்தேவா் படத்துக்கு முன்னாள் மாணவா்கள் சங்கத்தினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதைத் தொடா்ந்து, மாணவா்களை நல்லொழுக்கத்துடன், சிறந்த கல்வியாளா்களாக உருவாக்கப் பாடுபடுவோம் என பேராசிரியா்கள் உறுதிமொழி எடுத்தனா்.
இதில் கல்லூரிப் பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், கல்லூரி மாணவா்கள், முன்னாள் மாணவா் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
