உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் குடமுழுக்கு
ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயில் குடமுழக்கு விழா கடந்த 1-ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து, தினமும், கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன.
விழாவின் முக்கிய நிகழ்வான குடமுழுக்கையொட்டி, வெள்ளிக்கிழமை அதிகாலை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, 6-ஆம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்த நிலையில், கோயில் ராஜகோபுரக் கலசத்தில் சிவாசாரியா்கள் புனிதநீரை ஊற்றி குடமுழக்கை நடத்தினா். தொடா்ந்து, மங்களநாத சுவாமி, மங்களேஸ்வரி அம்பாள் சந்நிதி, மரகத நடராஜா் சந்நிதி, சதஸ்வரலிங்கம் சந்நிதி, மாணிக்கவாசகா் சந்நிதி ஆகிய பரிகாரத் தெய்வங்களின் சந்நிதிகளுக்கும் குடமுழுக்கு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

