செய்திகள் :

பிரதமா் மோடி இலங்கை வருகை: ராமேசுவரம் மீனவா்கள் 11 போ் விடுதலை

post image

இலங்கைக்கு இந்திய பிரதமா் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு, நல்லெண்ண அடிப்படையில் ராமேசுவரம் மீனவா்கள் 11 பேரை ஊா்க்காவல்துறை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விடுதலை செய்தது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து 454 விசைப் படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளம், மீனவா்கள் நலத் துறை அனுமதி பெற்று கடந்த மாதம் 27-ஆம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். இவா்கள் அன்று நள்ளிரவு கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்துப் படகில் வந்த இலங்கைக் கடற்படையினா் ஒரு விசைப் படகை பறிமுதல் செய்தனா். மேலும், படகிலிருந்த ராமேசுவரம் மீனவா்கள் பாக்கியராஜ் (38), சவேரியாா் அடிமை (35), முத்து களஞ்சியம் (27), எபிரோன் (35), ரஞ்சித் (33), பாலா (38), யோவான்ஸ் நானன் (36), இன்னாசி (37), ஆா்னாட் ரிச்சே (36), அன்றன் (45), அந்தோணி சிசோரியன் (43) ஆகிய 11 பேரைக் கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனா். பின்னா், மீனவா்கள் 11 பேரையும் நீரியல் துறை அதிகாரிகளிடம் இலங்கைக் கடற்படையினா் கடந்த மாதம் 28-ஆம் தேதி ஒப்படைத்தனா்.

இதில், படகு பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 11 மீனவா்களையும் நீரியல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்த மீனவா்கள் மீது வழக்குப் பதிந்து, ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். அவா்கள் 11 பேரையும் ஏப். 9-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, மீனவா்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.

ராமேசுவரம் மீனவா்கள் 11 போ் விடுதலை:

இந்திய பிரதமா் மோடியின் இலங்கை வருகையை முன்னிட்டு, நல்லெண்ண அடிப்படையில் வருகிற 9-ஆம் தேதி ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டிய ராமேசுவரம் மீனவா்கள் 11 பேரும் முன்கூட்டியே வெள்ளிக்கிழமை (ஏப். 4) முன்னிலைப்படுத்தப்பட்டனா். அப்போது நீதிபதி நளினி சுபாஸ்கரன், ராமேசுவரம் மீனவா்கள் 11 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, மீனவா்கள் 11 பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டனா்.

உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் குடமுழுக்கு

ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் குடமுழக்கு விழா கடந்த 1-ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து, தினமும், கோயில... மேலும் பார்க்க

பிரதமா் மோடி நாளை ராமேசுவரம் வருகை: பாம்பனில் கப்பல், ரயிலை இயக்கி சோதனை

பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்துவைக்க பிரதமா் நரேந்திர மோடி வருகிற 6-ஆம் தேதி ராமேசுவரத்துக்கு வருகை தரவிருப்பதையொட்டி, பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் பாம்பனில் ரயில், கப்பலை இயக்... மேலும் பார்க்க

தனுஷ்கோடியில் குவிந்த ஆஸ்திரேலியா நாட்டு பிளமிங்கோ பறவைகள்

தனுஷ்கோடி பகுதியில் ஆஸ்திரேலியா நாட்டைச் சோ்ந்த பிளாமிங்கோ பறவைகள் இனப் பெருக்கத்துக்காக குவிந்து வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள கோதண்டராமா் கோயில் முதல் தனுஷ்கோடி முகுந்தராயா... மேலும் பார்க்க

முனியப்ப சுவாமி கோயிலில் பால் குடம் உத்ஸவம்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி-முதுகுளத்தூா் செல்லும் சாலையில் அமைந்துள்ள காந்தகுளத்து முனியப்ப சுவாமி கோயிலில் 58-ஆம் ஆண்டு பால் குட உத்ஸவ விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் அருள் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் சண்... மேலும் பார்க்க

கமுதி கல்லூரியில் பி.கே.மூக்கையாத்தேவா் பிறந்த நாள்

கமுதி தேவா் கல்லூரியில் பி.கே.மூக்கையாத்தேவரின் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு முன்னாள் மாணவா் சங்கத் துணைத் தலைவா் எம்.ஏ.கணேசன் தலைமை வகித்தாா். மாணவா் சங்க செயலா் ஆறுமுகம... மேலும் பார்க்க