கம்பத்தில் அரசுப் பள்ளியில் எம்.பி. ஆய்வு
கம்பம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்து தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
கம்பம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் கோரி, தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க. தமிழ்ச் செல்வனிடம் மாணவிகளின் பெற்றோா்கள் கோரிக்கை வைத்தனா்.
இதையடுத்து, அந்தப் பள்ளியில் வெள்ளிக்கிழமை அவா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, இந்தப் பள்ளியில் சுகாதாரப் பணி மேற்கொள்ளவும், பொதுப்பணித் துறை மூலமாக கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.