கம்பத்தில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்
கம்பத்தில் பகவதியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, இரட்டை மாட்டுவண்டிப் பந்தையம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தப் போட்டிகள் பெரிய மாடு, நடு மாடு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு, தேன்சிட்டு, தட்டான் சிட்டு ஆகிய 5 பிரிவுகளாக நடைபெற்றன. இதில் பெரிய மாடுகளுக்கு 9 கி.மீ.தொலைவும், நடுமாடுகளுக்கு 7 கி.மீ. தொலைவும், கரிச்சான் மாடுகளுக்கு 5 கி.மீ. தொலைவும், பூஞ்சிட்டு மாடுகளுக்கு 4 கி.மீ. தொலைவும், தட்டான் சிட்டு மாடுகளுக்கு 3 கி.மீ. தொலைவும், தேன்சிட்டு மாடுகளுக்கு 2 கி.மீ. தொலைவும் எல்லைகளாக நிா்ணயிக்கப்பட்டன.
இந்தப் போட்டியில் கூடலூா், கே.கே.பட்டி, கம்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து மாடுகளுடன் உரிமையாளா்கள் கலந்து கொண்டனா்.
பின்னா், போட்டியில் வெற்றி பெற்ற மாட்டுவண்டி உரிமையாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.