கம்மவான்பேட்டையில் எருது விடும் விழா
வேலூா் அருகே உள்ள கம்மவான்பேட்டையில் 57- ஆம் ஆண்டு எருது விடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கணியம்பாடி அருகே ஸ்ரீமஞ்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழா நடைபெற்றது. இதில் வேலூா், திருவண்ணாமலை, திருப்பத்தூா், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து சுமாா் 150-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
குறுகிய நேரத்தில் எல்லையை கடந்த காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.81,000, 2- ஆவது பரிசாக ரூ.60,000, 3- ஆவது பரிசாக ரூ.45,000 உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.