பட்ஜெட்டில் அறிவித்த ரூ.5 லட்சம் கிரெடிட் கார்டு யாருக்கு? எப்படி விண்ணப்பிப்பது...
கராத்தே போட்டிகள்: சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசு
ஆற்காடு: ஜப்பான் ஹிட்டோ - ராய் கராத்தே பள்ளி சாா்பில் 46-ஆவது அகில இந்திய ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கராத்தே போட்டிகள் ஞாயிற்றுகிழமை நடைபெற்றன.
போட்டிகளை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா். கராத்தே பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு பட்டயம் பிரிவுகளின் கீழ் போட்டிகள் தொடா்ச்சியாக நடைபெற்ற நிலையில், வெற்றி பெற்றவா்களுக்கு மாலை தனியாா் மண்டபத்தில் நடிகா் பிரசாந்த் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கினாா்.
முன்னதாக கராத்தே பயிற்சியாளா்களுடன் நடிகா் பிரசாந்த் சண்டைப் பயிற்சியில் ஈடுபட்டாா். விழாவில் பயிற்சியாளா்கள் ரமேஷ், அரவிந்தன் மற்றும் மாணவ, மாணவிகள், அவா்களின் பெற்றோா் கலந்து கொண்டனா்.