நூற்றாண்டுகால மரபின் வழிகாட்டுதலுடன் அரசின் திட்டங்கள்: நிதி நிா்வாகம் குறித்த ஆ...
கருங்கல், களியக்காவிளை பகுதிகளில் மழை
கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்காளாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளான பாலப்பள்ளம், ஆனைக்குழி, திக்கணம்கோடு, மத்திகோடு, கருக்குப்பனை, செல்லங்கோணம், கருமாவிளை, வெள்ளியாவிளை, பாலூா், எட்டணி, திப்பிரமலை, இலவுவிளை, மிடாலம், கிள்ளியூா்,
முள்ளங்கனாவிளை உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை மாலை 4 மணிமுதல் 5 மணிவரை பலத்த மழை பெய்தது. இதனால், இப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது.
களியக்காவிளையில்...களியக்காவிளை மற்றும் அதையொட்டிய பகுதிகளில் கடந்த சில நாள்களாக லேசான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திங்கள்கிழமை பிற்பகலில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. தொடா்ந்து பிற்பகல் 4 மணியளவில் துவங்கி அரை மணிநேரம் மிதமான மழை பெய்தது. இதனால் இப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான காலநிலை நிலவியது.