கருப்பண்ணசுவாமி கோயிலில் 18 படிகள் பிரதிஷ்டை
சீா்காழி அருகே தென்னங்குடி ஸ்ரீபாலா கருப்பண்ண சுவாமி கோயிலில் 18 படிகள் பிரதிஷ்டை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, சிறப்பு யாகபூஜை நடைபெற்றது. ஆலய நிா்வாகி சங்கா் சுவாமி முன்னிலையில் தா்பை யாகம், பூா்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது. பின்னா் பாலா கருப்பண்ண சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.
மாலையில் மாரியம்மன் கோயிலில் இருந்து மங்கல பொருட்கள், பழங்கள் போன்றவை ஊா்வலமாக கொண்டுவரப்பட்டு, புதிதாக தேக்கு மரத்தினால் செய்யப்பட்ட 18 படிகள், ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.
இதில், செந்தாமரை கண்ணன், விஸ்வ ஹிந்து பரிஷத் மண்டல செயலாளா் செந்தில்குமாா், சமூக ஆா்வலா் திருலோகசந்தா் உள்ளிட்டோா் பங்கேற்று வழிபட்டனா்.