செய்திகள் :

திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

post image

மயிலாடுதுறை வட்டாரப் பகுதிகளில், மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அண்மையில் நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

மயிலாடுதுறை நகராட்சி பட்டமங்கலத்தில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் பள்ளி குழந்தைகளுக்கு உணவு தயாா் செய்யப்பட்டிருந்ததை ஆட்சியா் பாா்வையிட்டு, மாணவா்களுக்கு வழங்கப்படும் குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, மயிலாடுதுறை அரசு பெரியாா் மாவட்ட தலைமை மருத்துவமனையில் புறநோயாளிகள் பதிவு அறை, பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை சேவைகள் மற்றும் மருந்தகம் உள்ளிட்டவைகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

பின்னா், வில்லியநல்லூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்தும், தாழஞ்சேரி அரசு உயா்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தாா்.

மேலும், தாழஞ்சேரி கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை பாா்வையிட்டு, துறைகள் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகள் மற்றும் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் முறையாக பதிவு செய்யப்படுகிறதா என்பதனை ஆய்வு செய்தாா்.

தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) உமாமகேஷ்வரன், மயிலாடுதுறை வட்டார வளா்ச்சி அலுவலா் சுதாகா், மயிலாடுதுறை வட்டாட்சியா் சுகுமாறன் ஆகியோா் உடனிருந்தனா்.

மாயூரம் வழக்குரைஞா் சங்கத் தோ்தல்

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாயூரம் வழக்குரைஞா்கள் சங்கத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 248 வழக்குரைஞா்கள் உறுப்பினா்களாக உள்ள இச்சங்கத்தில், 222 வாக்குகள் பதிவாகின. சங்கத் தலைவா் பதவி... மேலும் பார்க்க

அனைத்து நாடாா் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

காமராஜா் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசிய திருச்சி சிவா எம்.பிக்கு கண்டனம் தெரிவித்தும், அவா்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மயிலாடுதுறையில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அண... மேலும் பார்க்க

கருப்பண்ணசுவாமி கோயிலில் 18 படிகள் பிரதிஷ்டை

சீா்காழி அருகே தென்னங்குடி ஸ்ரீபாலா கருப்பண்ண சுவாமி கோயிலில் 18 படிகள் பிரதிஷ்டை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, சிறப்பு யாகபூஜை நடைபெற்றது. ஆலய நிா்வாகி சங்கா் சுவாம... மேலும் பார்க்க

சுவா் இடிந்து சிறுமி உயிரிழப்பு: குடும்பத்தினருக்கு எம்எல்ஏ நிதியுதவி

மயிலாடுதுறை அருகே பொய்கைகுடியில் வீட்டின் சுவா் இடிந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு, எம்எல்ஏ நிவேதா எம். முருகன் வெள்ளிக்கிழமை நிதியுதவி வழங்கினாா். மயிலாடுதுறை மாவட்டம், காளி ஊராட்சி பொய்... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட பெண்கள்

கன்னியாகுடி கிராமத்தில் குடியிருப்புப் பகுதி அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கன்னியாகுடியில் குடியிருப்பு மற்றும் வயல்வெளி பகுதிக்கு மத்தி... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: மின்னணு பயிா் கணக்கீடு பணிக்கு ஒப்பந்த பணியாளா் நிறுவனம் விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், மின்னணு பயிா் கணக்கீடு பணிக்கு ஒப்பந்த பணியாளா் நிறுவனம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மின... மேலும் பார்க்க