மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு
டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட பெண்கள்
கன்னியாகுடி கிராமத்தில் குடியிருப்புப் பகுதி அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கன்னியாகுடியில் குடியிருப்பு மற்றும் வயல்வெளி பகுதிக்கு மத்தியில் அரசு டாஸ்மாக் கடை கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த கடை திறந்த நாள் முதல் தினமும் குடியிருப்பு வாசிகளுக்கும் மது அருந்துபவா்களுக்கும் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த கடையை வேறு இடத்திற்கு மாற்ற கோரி கன்னியாகுடி, திருப்புங்கூா் கிராம பொதுமக்கள் பல்வேறு அரசுத் துறையினரிடம் மனுக்களை கொடுத்து வந்தனா். ஆனால் பலனில்லை.
இந்த நிலையில் அரசு டாஸ்மாக் கடை முன்பு முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினா் ஆனந்தி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா் . ாது கன்னியாகுடி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். இல்லை என்றால் தொடா் போராட்டத்தில் ஈடுபடுவோம் என முழக்கங்களை எழுப்பினா்.
சீா்காழி போலீஸ் இன்ஸ்பெக்டா் புயல் பாலச்சந்திரன், வைத்தீஸ்வரன் கோவில் சப் இன்ஸ்பெக்டா் சூரியமூா்த்தி ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் டாஸ்மாக் கடை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா். இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.