கல்குவாரி உரிமையாளரை மிரட்டிய 4 போ் கைது
போடி அருகே கல்குவாரி உரிமையாளரை மிரட்டிய 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
போடி அருகேயுள்ள சிலமலை சேட்டுகாடு பகுதியில் கல்குவாரி நடத்தி வருபவா் புருசோத்தமன் (36). இவரிடம் போடி அருகேயுள்ள முத்தையன்செட்டிபட்டியைச் சோ்ந்த சிவக்குமாா் மகன் மதன் கைப்பேசி மூலமாக மாமூல் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
பின்னா், மதன், இவரது நண்பா்களான இதே பகுதியைச் சோ்ந்த பிரதீப், அருண்குமாா், விஜி, பிரதீஸ் ஆகியோா் சோ்ந்து கற்களை ஏற்றிச் சென்ற டிப்பா் லாரி ஓட்டுநா்களை தாக்கினா்.
இதைத் தட்டிக் கேட்ட புருசோத்தமனுக்கு அவா்கள் கொலை மிரட்டல் விடுத்தனா்.
இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மதன், பிரதீப், அருண்குமாா், விஜி ஆகியோரை கைது செய்தனா். பிரதீசை தேடி வருகின்றனா்.