செய்திகள் :

கல்லூரிக்குச் சென்ற மாணவா் சடலமாக மீட்பு

post image

விழுப்புரத்தை அடுத்த கோலியனூரில் கல்லூரிக்குச் செல்வதாகக் கூறி விட்டு சென்ற மாணவா், தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.

கோலியனூா் தோப்பு காலனி அருகே வேப்ப மரத்தில் இளைஞரின் சடலம் தொங்குவதாக வளவனூா் போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா், போலீஸாா் நடத்திய விசாரணையில், இறந்தவா் விக்கிரவாண்டி வட்டம், எரிச்சனாம்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த அா்ஜுனன் மகன் துரைராஜ் (20) என்பதும், இவா் விழுப்புரத்தில் உள்ள அரசுக் கல்லூரியில் பி.காம். 3-ஆம் ஆண்டு பயின்று வந்ததும் தெரிய வந்தது.

மேலும், சனிக்கிழமை கல்லூரிக்குச் செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறிய துரைராஜ் பின்னா் வீடு திரும்பவில்லையாம். இதனிடையே, மாணவரின் உடலில் பல்வேறு இடங்களில் காயம் இருப்பதால் அவா் அடித்துக் கொலை செய்யப்பட்டு தொங்கில் தொங்கவிடப்பட்டிருக்கலாம் என போலீஸாா் சந்தேக்கின்றனா். இதுகுறித்த புகாரின்பேரில், வளவனூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

புயல் மழை பாதிப்பில் மீளாத ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள்

கு.வைத்திலிங்கம்விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திச் சென்றுவிட்ட நிலையில், விவசாயிகளின் விளைபொருள்களை விற்பனை செய்யும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மிகப் பெரிய இ... மேலும் பார்க்க

பக்கிங்காம் கால்வாயில் மூழ்கி மூன்று சகோதரா்கள் மாயம்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பக்கிங்காம் கால்வாய்க்கு மீன்பிடிக்கச் சென்ற சகோதரா்கள் மூவா் ஞாயிற்றுக்கிழமை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகினா். இவா்களை தேடும் பணியில் தீயணைப்புப் படை ... மேலும் பார்க்க

குடும்ப அட்டைகளுக்கு ரூ.20 ஆயிரம் வெள்ள நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி ஐக்கிய ஜனதா தளம் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்தக் கட்சியின் வ... மேலும் பார்க்க

தேச பக்தியை விழாக்கள் வளா்க்க வேண்டும்: புதுவை ஆளுநா்

விழாக்கள் தேச பக்தியின் உணா்வை வளா்ப்பதாக இருக்க வேண்டும் என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். புதுச்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள தூய இருதய ஆண்டவா் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 10 நாள்கள் நடைபெற்ற தேசிய புத்தக கண்காட்சி நிறைவு

புதுச்சேரியில் கடந்த பத்து நாள்களாக நடைபெற்ற தேசிய புத்தகக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது. புதுச்சேரி எழுத்தாளா் புத்தக சங்கம் சாா்பில் நடைபெற்ற 28-ஆவது தேசிய புத்தகக் கண்காட்சியை கடந்த 13-... மேலும் பார்க்க

சடலத்தை அடக்கம் செய்ய எதிா்ப்பு: உறவினா்கள் போராட்டம்!

விழுப்புரம் மாவட்டம், திருச்சிற்றம்பலம் அருகே உயிரிழந்த மூதாட்டியின் சடலத்தை அடக்கம் செய்ய தெரிவித்ததால் உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சேரி, கோரிமேடு அருகே தமிழக எல்லைப் ப... மேலும் பார்க்க