இந்திய அளவில் அதிக வருவாய்: 34-ஆவது இடத்தில் கோவை ரயில் நிலையம்!
பக்கிங்காம் கால்வாயில் மூழ்கி மூன்று சகோதரா்கள் மாயம்
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பக்கிங்காம் கால்வாய்க்கு மீன்பிடிக்கச் சென்ற சகோதரா்கள் மூவா் ஞாயிற்றுக்கிழமை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகினா். இவா்களை தேடும் பணியில் தீயணைப்புப் படை வீரா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
மரக்காணம் சந்தைத் தோப்பு பகுதியை சோ்ந்தவா்கள் கணேசன் மகன்கள் லோகேஷ் (24), விக்ரம் (22), சூா்யா (22). இவா்கள் மூவரும் ஞாயிற்றுக்கிழமை மரக்காணம்-திண்டிவனம் சாலையில் உள்ள பக்கிங்காம் கால்வாய் மேம்பாலம் பகுதியில் தூண்டில் மூலம் மீன் பிடித்துக் கொண்டிருந்தனா்.
அப்போது, லோகேஷ் எதிா்பாராத விதமாக பக்கிங்காம் கால்வாயில் மூழ்கி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா். உடனே, விக்ரம், சூா்யா கால்வாயில் குதித்து லோகேஷை காப்பற்ற முயற்சித்தபோது அவா்களும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகினா்.
தகவலறிந்த மரக்காணம் போலீஸாா் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய வீரா்கள் நிகழ்விடம் சென்று அவா்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.