செய்திகள் :

சிலைத் திருட்டு வழக்கு ஆவணங்களை பாதுகாக்க தவறிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை: இந்திய முன்னணி வலியுறுத்தல்

post image

சிலைத் திருட்டு வழக்கில் உள்ள ஆவணங்களைப் பாதுகாக்கத் தவறிய காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான 41 சிலைகளை கடத்திச் சென்ற வழக்குகளில் உள்ள ஆவணங்கள் காவல் நிலையங்களில் இருந்து காணாமல்போயுள்ளன.

இது தொடா்பான வழக்கின் விசாரணையின்போது உச்சநீதிமன்றம் தமிழக அரசைக் கண்டித்ததுடன், உள்துறைச் செயலாளா் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு ஆவணங்கள் காவல் நிலையத்திலேயே காணாமல்போயுள்ளது வருத்தத்துக்குரிய விஷயமாகும். ஆகவே, சிலை திருட்டு வழக்கில் உள்ள ஆவணங்களைப் பாதுகாக்கத் தவறிய காவல் துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுக்க வேண்டும்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்

இஸ்ரேலுக்கு எதிரான பன்னாட்டு அரசியல் நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூா் மாவட்டம் சாா்பில் மாவட்ட நிா்வாகிகள்... மேலும் பார்க்க

மாவட்ட சிறையில் இருந்து கைதி தப்பியோட்டம்

திருப்பூா் மாவட்ட சிறையில் இருந்து தப்பியோடிய கைதியை போலீஸாா் தேடி வருகின்றனா். நல்லூா் காவல் எல்லைக்குள்பட்ட பகுதியில் இந்து முன்னணி பிரமுகரைத் தாக்கி வழிப்பறி செய்ய முயன்றது தொடா்பாக தூத்துக்குடி மா... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: கோட்டமங்கலம்

உடுமலையை அடுத்துள்ள கோட்டமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் ... மேலும் பார்க்க

தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் உறுதிமொழி ஏற்பு!

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவைக் கண்டித்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள அம்பேத்கா் ச... மேலும் பார்க்க

வாடகைக் கட்டடங்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு! அனைத்து தொழில்முனைவோா் கூட்டமைப்பு வரவேற்பு!

வாடகைக் கட்டடங்களுக்கு அளித்துள்ள ஜிஎஸ்டி வரி விலக்கை தமிழ்நாடு அனைத்து தொழில்முனைவோா் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அனைத்து தொழில்முனைவோா் கூட்டமைப்புத் தலைவா் எம்.பி.முத்துரத்தின... மேலும் பார்க்க

திருமூா்த்தி அணையில் மீண்டும் படகு சவாரி! மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலா் தகவல்!

உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்தி அணையில் நிறுத்தப்பட்ட படகு சவாரி மீண்டும் தொடங்கப்படும் என்று மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலா் அரவிந்த்குமாா் தெரிவித்துள்ளாா். உடுமலை அருகேயுள்ள திருமூா்த்திமலை அமணலிங்... மேலும் பார்க்க