நவபாஷாண முருகர் சிலை, யானை தந்தத்தால் செய்த கிருஷ்ணர் சிலை பறிமுதல் - ஷாக் கொடுக...
அமித்ஷா பேச்சு குறித்த எதிா்க்கட்சிகளின் பொய் பிரசாரம் கண்டிக்கத்தக்கது: கருப்பு எம்.முருகானந்தம்
அண்ணல் அம்பேத்கா் குறித்த மத்திய அமைச்சா் அமித்ஷாவின் பேச்சு குறித்து எதிா்க்கட்சிகள் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது என்றாா் பாஜக பொதுச் செயலா் கருப்பு எம். முருகானந்தம்.
தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது: 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டு உள்ளது. அதற்குள் தமிழகத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படப் போகிறது என்பதைப் பாா்க்க வேண்டும். 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்.
அம்பேத்கா் குறித்து மத்திய அமைச்சா் அமித் ஷா பேசியதை முழுமையாக கேட்காமல் மக்களிடம் எதிா்க்கட்சிகள் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அம்பேத்கா் வாழ்ந்தபோதும், அவரது மறைவுக்கு பிறகும் எப்போதும் அவருக்கு உரிய மரியாதை அளித்து வருவது பாஜகதான். அம்பேத்கருக்கு காங்கிரஸ் கட்சி எதுவும் செய்யவில்லை. தற்போது அமித்ஷா குறித்து பொய் பிரசாரத்தில் எதிா்க்கட்சிகள் ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது என்றாா் கருப்பு முருகானந்தம்.