செய்திகள் :

கல்வி நிறுவனங்களில் சாதிப் பெயர்களை நீக்க முடியுமா? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

post image

சென்னை : அரசால் நிர்வகிக்கப்படும் கல்வி நிறுவனங்களில் சாதிப் பெயர்களை நீக்க முடியுமா? என்பதற்கு தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாலைகள், தெருக்களுக்கு சூட்டப்படும் பெயர்களில் இருந்து சாதிய அடையாளங்கள் நீக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டியிருக்கும் உயர்நீதிமன்றம், கல்வி நிறுவனங்களிலும் அத்தகைய முற்போக்கான மாற்றத்தை ஏற்படுத்த பரிந்துரைத்துள்ளது.

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க தேர்தல் தொடர்பான சர்ச்சை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி முன்பு இன்று(பிப். 20) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி குறிப்பிட்டுள்ளதாவது: “பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சாதிப் பெயர்கள் பயன்படுத்தப்படுவது குறித்து அரசு விரிவான விளக்கமளிக்க வேண்டும். மாணவர்களிடையேயான சாதிப் பாகுபாடு சர்ச்சையான விவகாரத்தில் அரசு ஒருநபர் ஆணையம் அமைத்துள்ள நிலையில், அந்த ஆணையத்தின் அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், தெருப் பெயர்களில் சாதிப் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருப்பின், பெயரில் இருக்கும் சாதியை நீக்கிவிட்டு முதன்மை முதன்மை பெயரை மட்டும் தெருக்களுக்குச் சூட்ட அரசு தீர்மானித்திருந்தது. அதனடிப்படையில், இப்போது தனிநபர்களின் பெயரில் உள்ள தெருக்களுக்கு அந்த நபர்களின் சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டு முதன்மை பெயரால் மட்டுமே அழைக்கப்படுகின்றன.

குறிப்பிட்ட சாதிப் பெயர்களைச் சூட்டிக்கொண்டு செயல்படும் சங்கங்களில், அவற்றின் கல்வி நிறுவனங்களில் மேற்குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தோர் மட்டுமே சேர்ந்து கொள்ள அனுமதிக்கப்படுவது குறித்தும் அரசு விளக்கமளிக்க வேண்டும்.

அரசமைப்பின் குறிக்கோளான ‘சாதிகளற்ற சமூகம்’ என்ற நிலையை அடையவே சாதிப் பெயர்கள் பயன்படுத்தப்பட வேண்டும். அதேபோல, விளிம்புநிலை மக்களை மேம்படுத்தவும் பாகுபாடுகளைக் களையவும் இடஒதுக்கீடு வழங்கவும்தான் சாதிப் பெயர்கள் பயன்படுத்தப்படலாம்.

சாதிப் பாகுபாடு பெற்றோர்களின் கண்களைக்கூட மறைக்கிறது. இதனால், அவர்கள் தாங்கள் பெற்ற பிள்ளைகளைக் கொல்லவும் தயக்கம் காட்டுவதில்லை என்பதையும் சமூகத்தில் பார்க்க முடிகிறது” என்றார்.

இவ்விவகாரம் தொடர்பான பிற மனுக்களையும் சுட்டிக்காட்டியுள்ள நீதிமன்றம், கிறிஸ்தவ, முஸ்லிம் சமூகங்களிலும்கூட சாதிப் பாகுபாடு நிலவுகிறது என்றும், மேம்பட்ட சமூகங்களிலும் சாதியுணர்வு நீடிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.

தேன் கூட்டில் கல் எறியாதீர்கள்! முதல்வர் எச்சரிக்கை!

தேன் கூட்டில் கல் எறியாதீர்கள் என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (21.2.2025) கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் திடலில் நடைபெற்ற அரசு விழாவில்... மேலும் பார்க்க

கடலூர் மாவட்டத்துக்கு முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்!

கடலூர் மாவட்டத்துக்கு 10 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (21.2.2025) கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் திடலில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அட... மேலும் பார்க்க

வெளியே வந்த பூனை: குடியரசு துணைத்தலைவர் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. பதில்!

மும்மொழிக் கொள்கை விவகாரத்துக்கு இடையே குடியரசு துணைத்தலைவர் பேசியதற்கு கனிமொழி எம்.பி. பதிலளித்தது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி உள்ளது.தேசிய கல்விக் கொள்கை குறித்து தமிழகத்தில் சமீபகாலமாக அரசியல் கட்... மேலும் பார்க்க

கடலூர் மாவட்டத்தில் ரூ.1476.22 கோடியில் திட்டப் பணிகள்: முதல்வர் திறந்து வைத்தார்!

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.1476.22 கோடி செலவில் 602 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 178 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 44,689 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முத... மேலும் பார்க்க

அப்பாடா.. இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்த பூண்டு விலை!

கடந்த ஒரு சில மாதங்களாக, தங்கம் விலை போல, கையில் எடுத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு பூண்டு விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ பூண்டு ரூ.400 வரை விற்பனையானது.ஒரு கிலோ பூண்டு எவ்வளவு என்று கேட்ட நில... மேலும் பார்க்க

கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!

கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் போக்குவரத்து அமைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.கோபாலிடம் சமர்ப்பிப்பிக்கப்பட்டுள்ளதாக... மேலும் பார்க்க