அரசியல் துணிச்சல் இல்லாமல் இந்தியா-அமெரிக்கா நல்லுறவு ஏற்பட்டிருக்காது: பைடன்
கல்வியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா
மயிலாடுதுறையில் அய்யூப் கல்வி அறக்கட்டளையின்கீழ் இயங்கிவரும் பெஸ்ட் கல்வியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
கல்லூரித் தலைவா் அ. ஜாபீா் தலைமை வகித்தாா். கல்லூரி துணை முதல்வா் ஜெ. குமாா் வரவேற்றாா். இதில், மயிலாடுதுறை புனித சவேரியாா் ஆலய உதவி பங்குத்தந்தை ஜோ. கிளமெண்ட் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவா்களுக்கு கிறிஸ்துமஸ் நற்செய்திகளை வழங்கினாா். நிகழ்ச்சியில், மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முடிவில் பங்கேற்ற மாணவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. உதவிப் பேராசிரியா் என்.லெட்சுமி நன்றி கூறினாா்.