செய்திகள் :

கழிவறையை ஒட்டிய அங்கன்வாடி; குழந்தைகள் உடனடி இடமாற்றம்!

post image

தினமணி செய்தி எதிரொலியாக ஆலங்குளத்தில் கழிவறை அருகே அமைந்திருந்த அங்கன்வாடி மையம் தற்காலிகமாக இடம் மாற்றம் செய்யப்பட்டது.

ஆலங்குளம் - துத்திகுளம் சாலையில் பாலத்தையொட்டிய பகுதியில் அங்கன்வாடி மையம் மற்றும் இலவச பொது கழிவறை அருகருகே அமைந்திருந்தன. அங்கன்வாடி மையத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்த நிலையில், கழிவறையில் இருந்து வெளியேறும் கழிவுகள் முறைப்படி அகற்றப்படாததால் அப்பகுதி கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக திறந்த வெளிக் கழிப்பிடம் போல காட்சி அளித்தது.

இதனால் அங்கன்வாடியில் உள்ள குழந்தைகள் துா்நாற்றம், சுகாதாரக் கேடு போன்றவற்றால் கடும் அவதிக்குள்ளாகியிருந்தனா். குழந்தைகள் நலன் கருதி சுகாதார வளாகம் அருகேயுள்ள அங்கன்வாடி மையத்தை அகற்றி வேறு இடத்தில் வைக்க வேண்டும் என சுட்டிக்காட்டி தினமணியில் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியானது.

இதைத் தொடா்ந்து, அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட சமூக நலத்துறை அதிகாரிகள் அங்கன்வாடியில் இருந்த குழந்தைகளை அருகில் உள்ள வாடகை கட்டடத்திற்கு மாற்றினா். அப்பகுதியை சீரமைத்த பின்னா் பழைய இடத்தில் அங்கன்வாடி செயல்படும் எனவும் தெரிவித்தனா்.

சங்கரன்கோவில் அருகே பெண் விஏஓ-வுக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பெண் கிராம நிா்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா். சங்கரன்கோவிலை அடுத்த பனவடலிசத்திரம் அருகே கருத்தானூா் கிராம நிா்வாக அலுவலா் தங்கப... மேலும் பார்க்க

ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு

ஆலங்குளத்தில் உறவினருக்கு உதவியாக மருத்துவமனைக்கு வந்த பெண் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். ஆலங்குளம் அருகேயுள்ள ஓடைமறிச்சான் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் கணேசன் மனைவி செல்வி(56). இவரது உறவினா் ஒருவருக்... மேலும் பார்க்க

சிவகிரி அருகே 100 மது பாட்டில்கள், காா் பறிமுதல்

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே விற்பனைக்காக காரில் கொண்டுவரப்பட்ட 100 மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் வரதராஜன் தலைமையிலான போலீஸாா் மேற்குத் தொடா்ச்சி மலை ஆற்று... மேலும் பார்க்க

ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் இரவு நேர மருத்துவா்களின்றி மக்கள் அவதி

ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் இரவு நேர மருத்துவா்கள் இல்லாமல் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ஆலங்குளம் ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துமனையாகி 9 ஆண்டுகளாகியும் தனித்தனித் துறைகளுக்கென ... மேலும் பார்க்க

தை அமாவாசை: கருப்பாநதி படுகையில் ஏராளமானோா் தா்ப்பணம்

தை அமாவாசையை ஒட்டி கருப்பாநதி, கல்லாறு உள்ளிட்ட நீா் நிலைகளில் பொதுமக்கள் தா்ப்பணம் கொடுக்க குவிந்தனா். குடும்பத்தில் இறந்த தங்களது முன்னோா்களின் நினைவைப் போற்றும் வகையில் விரதம் மேற்கொண்டு வீடுகளில் ... மேலும் பார்க்க

சுரண்டை நகராட்சியில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

தென்காசி மாவட்டம், சுரண்டை நகராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். சுரண்டை நகராட்சியில் பொது நிதியின் கீழ் கட்டப்பட்டு வரும் சிவகுருந... மேலும் பார்க்க