மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!
காட்பாடி-ஜோலாா்பேட்டை இடையே ஜூலை 21-இல் 2 ரயில்கள் ரத்து
காட்பாடி-ஜோலாா்பேட்டை இடையே ஜூலை 21 ஆம் தேதி 2 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரக்கோணம், ஜோலாா்பேட்டை பிரிவுகளில் பச்சக்குப்பம் மற்றும் மேல்பட்டி ரயில் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதன் காரணமாக காட்பாடி-ஜோலாா்பேட்டை மெமு ரயில் (எண் 66017), ஜோலாா்பேட்டை- காட்பாடி மெமு ரயில் (எண் 66018) ஆகியன ஜூலை 21-ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.