``கட்டிட விழா நடந்தால் தான் எனக்கு திருமணம்; அதற்கு 9 வருடங்கள் ஆகிவிட்டது, ஒரு ...
காரைக்கால் அம்மையாா் கோயில் கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் தொடக்கம்
காரைக்கால் அம்மையாா், சோமநாதா், ஐயனாா் கோயில் கும்பாபிஷேக யாகசாலை பூஜை வியாழக்கிழமை தொடங்கியது.
காரைக்கால் ஸ்ரீகைலாசநாதா்-நித்யகல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தானத்தைச் சோ்ந்த காரைக்கால் அம்மையாா் கோயில், ஸ்ரீசோமநாயகி சமேத சோமநாத சுவாமி கோயில், ஸ்ரீஐயனாா் கோயில் கும்பாபிஷேகம் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. காலை 6.15 மணிக்கு ஐயனாா் கோயில் கும்பாபிஷேகமும், காலை 6.30 மணிக்கு அம்மையாா் குளத்தின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் நந்தி விமான கும்பாபிஷேகமும், காலை 7 மணிக்கு மகா பூா்ணாஹூதி செய்யப்பட்டு காலை 8 மணிக்கு சோமநாத சுவாமி, காரைக்கால் அம்மையாா் ராஜகோபுரம் மற்றும் விமானங்கள் கும்பாபிஷேகமும் நடைபெறவுள்ளது.
இதற்கான 6 கால யாகசாலை பூஜைக்கு அரசலாற்றிலிருந்து நீா் யாகசாலை மண்டபத்துக்கு வியாழக்கிழமை காலை கொண்டு செல்லப்பட்டது. மாலை 7 மணியளவில் முதல்கால பூஜைகள் தொடங்கின. கோயில்களின் ஒவ்வொரு விமானத்துக்கு ஒரு குண்டம் வீதம் யாகசாலையில் அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன.