பாகிஸ்தான்: பாதுகாப்புப் படையினர் அதிரடி நடவடிக்கை! 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை...
தங்க மாரியம்மன் வெள்ளைசாற்றில் புறப்பாடு
காரைக்கால் ஸ்ரீதங்க மாரியம்மன் ரிஷப வாகனத்தில் வெள்ளைசாற்றுடன் புதன்கிழமை வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.
காரைக்கால் அருகே தலத்தெரு பகுதியில் உள்ள ஸ்ரீதங்க மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் ஏப். 27-ஆம் தேதி கொடியேற்றம், காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. நிகழ்ச்சியின் 2-ஆம் நாள் அம்பாள் அன்ன வாகனத்தில் புறப்பாடு நடைபெற்றது. 3-ஆம் நாள் சிம்ம வாகனத்தில் புறப்பாடு செய்யப்பட்டது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக புதன்கிழமை இரவு அம்மன் ரிஷப வாகனத்தில் வீற்றிருந்தவாறு வெள்ளை சாற்று அலங்காரத்தில் (வெள்ளை நிற மலா்களால் அலங்காரம்) வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. முன்னதாக அம்பாளுக்கு சோடச உபசாரங்கள் செய்யப்பட்டன. சுவாமி புறப்பாட்டில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். தொடா் நிகழ்ச்சியாக மே 5-ஆம் தேதி தீமிதி நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீசிவலோகநாத சுவாமி கோயில் நிா்வாகம் செய்துள்ளது.