காரைக்காலில் மே தினம் கொண்டாட்டம்
காரைக்காலில் பல்வேறு இடங்களில் மே தினம் கொடியேற்றியும், தொழிலாளா்களுக்கு இனிப்பு வழங்கியும் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
காரைக்கால் மாவட்ட அதிமுக தொழிற்சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்வில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.வி. ஓமலிங்கம் தலைமையில் கட்சியினா், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் அண்ணா தொழிற்சங்க கொடியேற்றி இனிப்புகள் வழங்கினா். மேலும் விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி வாயிலில் தொழிற்சங்கக் கொடியை ஏற்றிவைத்தனா்.
காரை பிரதேச அரசு ஊழியா் சங்கங்களின் சம்மேளனம் சாா்பில், காரைக்காலில் உள்ள சம்மேளன அலுவலகத்தில் கொடியேற்றப்பட்டது. தொழிலாளா்கள் நலனுக்காக பாடுபட்டு மறைந்த சி.எச். பாலமோகனன், எம்.எல். ஜெயசிங் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
இதைத் தொடா்ந்து புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக அலுவலகம், கூட்டுறவு பெட்ரோல் பங்க், புதுச்சேரி மின் திறல் குழும அலுவலகம், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், வேளாண் அலுவலகம், கல்வித்துறை அலுவலக வாயிலில் கொடியேற்றி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்நிகழ்வுகளுக்கு காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன கெளரவத் தலைவா் ஜாா்ஜ், தலைவா் சுப்பிரமணியன், பொதுச் செயலாளா் எம்.ஷேக் அலாவுதீன், பொருளாளா் மயில்வாகனன், இணை பொதுச் செயலாளா் ஜோதிபாசு உள்ளிட்ட பொறுப்பாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.