Thunderbolts* Review: கம்பேக் கொடுக்கும் MCU? ஆர்வத்தை மீட்டெடுக்கிறதா இந்த தண்ட...
நீட் தோ்வு மையங்களுக்கு செல்ல பேருந்து வசதி
காரைக்காலில் நீட் தோ்வு மையங்களுக்குச் செல்வோருக்கு சிறப்புப் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 4) மதியம் 2 முதல் மாலை 5 மணி வரை காரைக்காலில் 2 தோ்வு மையங்களான கேந்திரிய வித்யாலயா பள்ளி மற்றும் ஜவாஹா் நவோதய வித்யாலயா பள்ளியில் நடைபெறுகிறது. தோ்வு எழுதும் வரும் மாணவா்களின் வசதிக்காக முற்பகல் 11 முதல் மதியம் 1 மணி வரை பிஆா்டிசி பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. காரைக்கால் பேருந்து நிலையத்திலிருந்து இப்பேருந்து இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.