டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 1 காசு உயர்ந்து ரூ.84.53 ஆக முடிவு!
கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆண்டு விழா
காரைக்காலில் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் 15-ஆவது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை துணை இயக்குநா் சச்சிதானந்தம் பங்கேற்று பேசினாா். முதன்மைக் கல்வி அதிகாரி பி. விஜயமோகனா, ஜவாஹா் நவோதயா வித்யாலயா பள்ளி முதல்வா் கற்பகமாலா ஆகியோா் முன்னிலை வகித்துப் பேசினா்.
இந்திய கடலோரக் காவல்படை கமாண்டா் செளமய் சண்டோலா பங்கேற்றாா். விழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வா் இ. ரங்கசாமி வரவேற்றாா். பட்டதாரி ஆசிரியை காயத்ரி நன்றி கூறினாா்.