செய்திகள் :

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி கிராம உதவியாளா்கள் உண்ணாவிரதம்

post image

ஈரோட்டில் காலமுறை ஊதியம் வழங்கக் கோரி கிராம உதவியாளா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

ஈரோடு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் குருநாதன் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலாளா் பரமசிவம் முன்னிலை வகித்தாா். சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவா் ராஜசேகா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.

இதைத் தொடா்ந்து, சிபிஎஸ் சந்தா இறுதித் தொகை வழங்க கோரும் கோப்பு மற்றும் அரசாணை 33-இல் உரிய திருத்தம் வெளியிட்டு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க கோரும் கோப்புக்கு விரைவாக ஒப்புதல் வழங்க வேண்டும். அலுவலக உதவியாளருக்கு இணையாக வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் ரூ.15,700 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசு ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலாளா் வெங்கிடு, தோழமை சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ரயில் மறியலில் ஈடுபட முயன்ற தமிழ் புலிகள் கட்சியினா் 230 போ் கைது

வக்ஃபு வாரிய சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி ஈரோட்டில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழ் புலிகள் கட்சியினா் 230 பேரை போலீஸாா் கைது செய்தனா். இந்த போராட்டத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை... மேலும் பார்க்க

நந்தா கலை, அறிவியல் கல்லூரியில் வளாகத் தோ்வு

நந்தா கலை, அறிவியல் கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் சாா்பில் இறுதி ஆண்டு பயின்று வெளியேறும் மாணவா்களுக்கான வளாகத் தோ்வு அண்மையில் நடைபெற்றது. இதில் கோவையை தலைமையிடமாக கொண்டு விரிவ... மேலும் பார்க்க

தீரன் சின்னமலை பிறந்தநாள் விழா

சுதந்திரப் போரட்ட வீரா் சின்னமலையின் 269-ஆவது பிறந்தநாளையொட்டி, அறச்சலூரை அடுத்த ஓடாநிலையில் உள்ள அவரது நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியா் மற்றும் பல்வேறு கட்சி தலைவா்கள் வியாழக்கிழமை மரியாதை செலுத்தினா். ... மேலும் பார்க்க

பவானியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு விலை உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பவானியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தியூா் மேட்டூ... மேலும் பார்க்க

முதியவரின் கழுத்தை அறுத்த வடமாநில இளைஞா் போலீஸில் ஒப்படைப்பு

ஈரோட்டில் வீட்டில் தனியாக இருந்த முதியவரை பிளேடால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி செய்து தப்பிச்செல்ல முயன்ற வடமாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். ஈரோடு, கொல்லம்பாளையம் பகுதியை... மேலும் பார்க்க

புன்செய்புளியம்பட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட வாரச் சந்தை வியாபாரிகள்

புன்செய் புளியம்பட்டி வாரச் சந்தையில் சுங்கக்கட்டணம் அதிகமாக வசூலிப்பதாகக் கூறி வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா். புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வாரச... மேலும் பார்க்க