செய்திகள் :

காஸா: இஸ்ரேல் தாக்குதலில் மேலும் 17 போ் உயிரிழப்பு

post image

காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 17 போ் உயிரிழந்தனா்; 41 காயமடைந்தனா்.

இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை கூறியதாவது:

காஸா பகுதிகளில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17 போ் உயிரிழந்தனா்; 41 போ் காயமடைந்தனா்.

இத்துடன், இந்தப் பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி முதல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 45,553-ஆக உயா்ந்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 1,08,379 பாலஸ்தீனா்கள் காயமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்கொரியா: பாறை மீது மீன்பிடி படகு மோதியதில் 3 பேர் பலி

தென்கொரியாவில் பாறையில் மீன்பிடி படகு பாறையில் மோதியதில் 3 பேர் பலியானார்கள். தென் கொரியாவின் தென்மேற்கு கடற்கரையில் கேஜியோ தீவு அருகே பாறைகள் மீது மீன்பிடி படகு இன்று திடீரென மோதி விபத்துக்குள்ளானது.... மேலும் பார்க்க

சீன சந்தையில் தீ விபத்து! 8 பேர் பலி!

சீனாவில் மளிகைச் சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலியாகினர்.வடக்கு சீனாவின் ஷாங்ஜியாகோ நகரில் உள்ள லிகுவாங் சந்தையில் சனிக்கிழமை (ஜன. 4) மதியம் 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் டிரம்ப்புக்கு சிறையில்லை; சிக்னல் கொடுத்த நீதிபதி!

டொனால்ட் டிரம்ப் மீது பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வழக்கின் விசாரணை வருகிற 10 ஆம் தேதியில் தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது.அமெரிக்காவில் 2016 ஆம் ஆண்டில் டொனால்ட் டிரம்ப் மீது அமெரிக்க நடிகை பாலியல... மேலும் பார்க்க

தீ விபத்தில் 579 செல்லப்பிராணிகள் பலி!

டெக்சாஸில் செல்லப்பிராணிகள் விற்கும் கடைக்குள் புகை சூழ்ந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டு, உள்ளிருந்த செல்லப்பிராணிகள் பலியாகின.அமெரிக்காவில் டெக்சாஸில் உள்ள டல்லாஸ் பகுதியில் வணிக வளாகத்தில் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

பேரிடர் போன்ற சூழல் எதுவும் இல்லை.. மெடாநியூமோ வைரஸ் குறித்து சீனா விளக்கம்

உலகமே, சீனத்தில் அடுத்த பேரிடர் தொடங்கிவிட்டதாக அச்சத்தில் ஆழ்ந்திருக்கும் நிலையில், அச்சுறுத்தும் வகையில் எதுவும் நடக்கவில்லை என சீனா தரப்பு விளக்கம் அளித்துள்ளது.சீனாவில், கடும் காய்ச்சல், நுரையீரல்... மேலும் பார்க்க

6 ஆண்டுகளாக பாலியல் குற்றங்களுக்கு பிரிட்டன் பிரதமர் உடந்தை: எலான் மஸ்க் குற்றச்சாட்டு!

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வழக்கு இயக்குநராக இருந்தபோது, பாலியல் குற்றங்களில் உடந்தையாக இருந்ததாக எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார்.பிரிட்டனில் இளம் பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டுவது என்பது ... மேலும் பார்க்க