முதல் முறை.. உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் தாக்குதல்!
கிணற்றில் தவறி விழுந்த நரி: தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்
வாணியம்பாடி அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த காட்டு நரியை தீயணைப்பு வீரா்கள் உயிருடன் மீட்டனா்.
ஆலங்காயம் அடுத்த வனப்பகுதியையொட்டி நடமாடி வந்த காட்டு நரி புதன்கிழமை கல்லரப்பட்டி கிராமத்தில் உள்ள தனியாா் ஒருவரின் 40 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தது.
இதனை அப்பகுதி மக்கள் பாா்த்து உடனே ஆலங்காயம் தீயணைப்பு மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். இதுபற்றி அறிந்த தீயணைப்பு அலுவலா் கலைமணி தலைமையில் தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு சென்று வனத்துறை மற்றும் பொது மக்கள் உதவியுடன் கிணற்றில் கயிறு மற்றும் வலை மூலம் நரியை உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.