கிறிஸ்துமஸ்: மறை மாவட்ட ஆயருக்கு அமைச்சா் வாழ்த்து
கிறிஸ்துமஸ் விழாவையொட்டி சேலம் மறை மாவட்ட ஆயா் அருட்செல்வம் ராயப்பனுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா். ராஜேந்திரன் நேரில் வாழ்த்து தெரிவித்தாா்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ஆா்.ராஜேந்திரன், மறை மாவட்ட ஆயரின் இல்லத்துக்கு நேரில் சென்று, மறை மாவட்ட ஆயா் அருட்செல்வம் ராயப்பனுக்கு பூங்கொத்து வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தாா்.
இதே போல, சேலம் மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஏ.ஆா்.பி. பாஸ்கா் தலைமையில் அக்கட்சியினா், மறை மாவட்ட ஆயா் அருட்செல்வம் ராயப்பனை சந்தித்து சால்வை அணிவித்து கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தனா். அப்போது, மாநகா் மாவட்ட பொருளாளா் தாரை ராஜகணபதி, மாநகர துணைத் தலைவா் திருமுருகன், மண்டல தலைவா்கள் சாந்தமூா்த்தி, நிசாா் அகமது உள்ளிட்டோா் உடனிருந்தனா்.