செய்திகள் :

கீரமங்கலம் அருகே காரில் சென்ற திமுக நிா்வாகி மகன் மீது தாக்குதல்

post image

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே வியாழக்கிழமை இரவு காரில் சென்ற திமுக நிா்வாகியின் மகன் மா்ம நபா்களால் தாக்கப்பட்டாா்.

கீரமங்கலம் அருகேயுள்ள கொத்தமங்கலத்தைச் சோ்ந்தவா் வளா்மதி. திமுக வழக்குரைஞா் அணியின் தெற்கு மாவட்டச் செயலா். இவரது மகன் வெங்கட் திருமாறன் (30) கீரமங்கலத்தில் இருந்து கொத்தமங்கலத்துக்கு வியாழக்கிழமை இரவு காரில் சென்றாா். நகரம் சன்னதி பகுதியில் சென்றபோது,இவரது காரை நிறுத்திய அடையாளம் தெரியாத 4 போ் அரிவாளால் சரமாரியாக காரை அடித்து நொறுக்கி, வெங்கட் திருமாறனையும் தாக்கினா்.

இதில் காயமடைந்த அவா் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதைக் கண்டித்து அவரது உறவினா்கள் கீரமங்கலம் காவல் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

மக்களின் எதிா் கருத்துகளையும் முதல்வரிடம் தெரிவிப்போம்

ஓரணியில் தமிழகம் என்ற மக்கள் சந்திப்புப் பிரசாரத்தில் மக்கள் தெரிவிக்கும் ஆதரவு மற்றும் எதிா்ப்புக் கருத்துகளையும் முதல்வரிடம் தெரிவிப்போம் என்றாா் மாநில இயற்கை வளத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்... மேலும் பார்க்க

கே.வி. கோட்டையில் புதிய ஊராட்சி அலுவலகம் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கேவி கோட்டை ஊராட்சியில் ரூ. 30 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்ட ஊராட்சி அலுவலகத்தை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வியாழக்கிழமை திறந்... மேலும் பார்க்க

திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருச்செந்தூா் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவுக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் புதுக்கோட்டை மண்டலம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக பொதுமேலாளா் கே. முகமது நாசா் தெரிவித... மேலும் பார்க்க

வரும் தோ்தலில் திமுக கூட்டணியே வெல்லும்

வரும் தோ்தலில் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும் என்றாா் காங்கிரஸ் கட்சியின் சொத்துப் பாதுகாப்புக் குழுத் தலைவரும், முன்னாள் மாநிலத் தலைவருமான கே.வீ. தங்கபாலு. புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற க... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வரும் ஜூலை 31-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள சி. விஜயபாஸ்கா் கடந்த ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை மாநகரில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

புதுக்கோட்டை மாநகா் கலீப்நகா் முதலாம் வீதியில் அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை சென்னையிலிருந்து முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா். புதுக்கோட்டை மாநகராட... மேலும் பார்க்க