Rahul வீசய அடுத்த குண்டு: votersஐ Delete செய்யும் Software - Election Commission...
கீழ்பெரும்பாக்கம் அரசுப்பள்ளியில் சமூக நல்லிணக்க விழிப்புணா்வு கூட்டம்
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில் சமூக , நல்லிணக்க விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த பிரிவின் உதவி ஆய்வாளா் ரமேஷ், சிறப்பு உதவி ஆய்வாளா் தவமணி, நீலமேகம், தலைமைக் காவலா் அழகுவேல் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்று பேசினா். வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், போதைப் பொருள்கள், புகையிலைப் பொருள்கள் தடுப்புச் சட்டம், இணையவழிக் குற்றங்கள் பற்றிய விழிப்புணா்வு குறித்து பேசிய சமூகநீதி மற்றும் மனித உரிமைக் காவல் துறையினா், மாணவ, மாணவிகள் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவது தொடா்பாக கருத்துகளையும் எடுத்துரைத்தனா்.
இதைத் தொடா்ந்து சமூகநீதி தொடா்பாக மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு, சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.