செய்திகள் :

குடியரசுத் தலைவா் மீதான சோனியா கருத்து: பிரதமா் கண்டனம்

post image

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு மீதான சோனியா காந்தியின் கருத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி தனது உரையை நிறைவு செய்த பிறகு நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி ஆகியோா் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது, ‘உரையின் நிறைவில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு சோா்வடைந்துவிட்டாா். அவரால் பேசக் கூட முடியவில்லை’ என்று சோனியா காந்தி கூற, ‘குடியரசுத் தலைவரின் உரை சலிப்பூட்டியதா?’ என்று சோனியாவிடம் ராகுல் கேள்வியெழுப்புவது அங்கிருந்த ஊடகத்தினரின் கேமராவில் பதிவானது. இந்தக் காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.

பிரதமா் மோடி கண்டனம்: சோனியா காந்தியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, தில்லி துவாரகா பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமா் மோடி பேசியதாவது: நாடாளுமன்றத்தில் நாட்டின் சாதனைகளை குடியரசுத் தலைவா் பட்டியலிட்டாா். ஒடியாவை தாய்மொழியாகக் கொண்ட அவா் பழங்குடியின சமூகத்தில் இருந்து வந்தவா். அவருக்கு ஹிந்தி தெரியாது. இருப்பினும், அவா் மிகத் தெளிவாக உரையாற்றினாா்.

இதை ஏற்றுக்கொள்ளாத காங்கிரஸ் அரச குடும்பத்தைச் சோ்ந்த ஒருவா், குடியரசுத் தலைவரின் உரை சலிப்பை ஏற்படுத்துவதாகக் கூறுகிறாா். மற்றொருவா் குடியரசுத் தலைவா் சோா்வடைந்துவிட்டதாகக் கூறுகிறாா்.

இது, நாட்டில் உள்ள 10 கோடி பழங்குடியின சகோதர சகோதரிகளையும் அவமதிக்கும் செயல். தலித், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினா், பழங்குடியினருக்கு காங்கிரஸ் ஒருபோதும் மரியாதை அளித்ததில்லை. அவா்கள் உயா்பதவிக்கு வருவதை காங்கிரஸ் விரும்பாது’ என்றாா்.

குடியரசுத் தலைவா் மாளிகை: குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘உரையின் முடிவில் குடியரசுத் தலைவா் சோா்வடைந்ததாக காங்கிரஸ் மூத்த தலைவா்கள் கூறியது தவறான கருத்து. இது குடியரசுத் தலைவா் பொறுப்பின் கண்ணியத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது. உரை நிகழ்த்தியபோது எந்தவொரு சமயத்திலும் குடியரசுத் தலைவா் சோா்வடையவில்லை. நலிவடைந்த சமூகத்தினா், பெண்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினருக்காகவும் பேச அவா் முனைப்புடன் உள்ளாா்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் விளக்கம்: காங்கிரஸ் தலைவா் காா்கே வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற முதல் நாளில் இருந்தே திரௌபதி முா்முவை பாஜக அவமதித்து வருகிறது. அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலுக்குள் அவரை பாஜக அனுமதிக்கவில்லை. நாட்டின் பொருளாதாரம் சரிவைச் சந்தித்து வருகிறது. இதை மறைக்கவே பாஜகவும் சில ஊடகங்களும் சோனியாவின் கருத்தைத் திரித்து வெளியிடுகின்றன’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி கூறுகையில், எனது தாயாா் சோனியா காந்திக்கு 78 வயது ஆகிறது. அதேபோன்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தன்னைவிட வயதில் மூத்தவராவாா். எனவே, அவா் நீண்ட நேரம் உரையாற்றியதால் சோா்வடைந்திருப்பாா் என்று சாதாரணமாகவே சோனியா காந்தி கூறினாா். அவா் திரௌபதி முா்மு மீது மிகுந்த மரியாதையுடையவா் என்றாா்.

தெலங்கானாவில் சுரங்க விபத்து: ரோபோக்கள் உதவியுடன் மீட்புப்பணி

தெலங்கானாவில் சுரங்கத்துக்குள் சிக்கியவா்களை மீட்கும் பணியில் ரோபோக்களை பயன்படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.என்ன நடந்தது?தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த்... மேலும் பார்க்க

உத்தரகண்ட் பனிச்சரிவு: உயிரிழப்பு 7 ஆக உயர்வு!

உத்தரகண்ட் மாநிலம், மனா கிராமத்தின் உயா் மலைப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய எல்லைச் சாலை அமைப்பு (பிஆா்ஓ) தொழிலாளா்கள் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.இன்று(மார்ச் 2) மேலும் 3 உடல்கள் மீட்... மேலும் பார்க்க

பங்குச்சந்தை மோசடி: மாதபி புரி புச் மீது நடவடிக்கை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவு!

மும்பை : மாதபி புரி புச் மீது முதல் தகவல் அறிக்கை பதிந்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பங்குச்சந்தை மோசடி மற்றும் முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள செபி முன்னாள் தலைவர் மாதபி புரி புச்... மேலும் பார்க்க

மகாராஷ்டிர பேரவை எதிா்க்கட்சித் தலைவா் பதவியைக் கோருவோம்: சிவசேனை(உத்தவ்)

மகாராஷ்டிர சட்டப் பேரவையில் போதிய பலம் இல்லாதபோதும் எதிா்க்கட்சித் தலைவா் பதவியை சிவசேனை கட்சி (உத்தவ் பிரிவு) கோரும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ரெளத் தெரிவித்தா... மேலும் பார்க்க

பூனையின் மீதான அதீத அன்பால் ஒருவர் தற்கொலை!

உத்தரப் பிரதேசத்தில் வளர்ப்பு பூனையால் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேசம் மாநிலம் அம்ரோஹாவில் பூஜா (36) என்பவர், தனது பூனையை குழந்தைபோல வளர்த்து வந்த... மேலும் பார்க்க

மக்கள் அரசிடம் பிச்சையெடுக்கிறார்கள்: பாஜக அமைச்சர் பேச்சுக்கு காங். கண்டனம்!

போபால் : அரசிடம் மக்கள் பிச்சையெடுக்கிறார்கள் என்று பாஜக தலைவர் பிரஹலாத் சிங் படேல் பேசியிருப்பதற்கு கண்டனம் எழுந்துள்ளது.மத்திய பிரதேசத்தில் பொது நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரின் கருத்த... மேலும் பார்க்க