தெலங்கானா சுரங்க விபத்து: விஞ்ஞானிகள் பரிந்துரைத்த இடங்களில் மீட்புப் பணி!
டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆர்வம்: இங்கிலாந்து பயிற்சியாளர்
டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆர்வமாக இருக்கிறார் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும் என இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஜோஃப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து அணிக்காக கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். அதன் பின், காயம் காரணமாக அவரால் டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியவில்லை. 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஆர்ச்சர், இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 42 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
இதையும் படிக்க: விராட் கோலிக்கு முன்னாள் மே.இ.தீவுகள் வீரர் புகழாரம்!
டெஸ்ட்டில் விளையாட ஆர்வம்
இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து வெளியேறிய நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆர்வமாக இருக்கிறார் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும் என இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்து அணிக்காக ஜோஃப்ரா ஆர்ச்சர் சரியாக பயன்படுத்தப்படுவதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும். அவருக்கு அடிக்கடி காயம் ஏற்படும் அபாயம் இருப்பதை கவனத்தில் கொண்டு நாங்கள் செயல்படுகிறோம். ஆனால், அவர் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வமாக இருக்கிறார் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். அணியின் வேகப் பந்துவீச்சு வரிசையில் அவர் இணைந்தால், இங்கிலாந்து அணியின் வலிமை மேலும் கூடும் என்றார்.
இதையும் படிக்க: ரஞ்சி கோப்பை: விதர்பா 3-வது முறையாக சாம்பியன்!
சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து வெளியேறிய இங்கிலாந்து அணி வருகிற மே 22 ஆம் தேதி ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. அதன் பின், இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், ஆஷஸ் தொடரிலும் விளையாடவுள்ளது.