செய்திகள் :

Tanushka Singh: `பயத்தை உணரவில்லை' - இந்திய விமானப்படையின் முதல் பெண் விமானி தனுஷ்கா சிங்

post image

றக்கும் படை அதிகாரியாக (Flying Officer) பணியாற்றி வந்த தனுஷ்கா சிங், இந்திய போர் விமானப்படையில் ஜாகுவார் போர் விமானத்தின் முதல் நிரந்தர பெண் விமானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை போர் விமானப்படையில் பெண்கள் விமானியாக நியமிக்கப்படாத நிலையில், இச்சாதனையை மங்களூரைச் சேர்ந்த தனுஷ்கா சிங் செய்துள்ளார்.

தனுஷ்கா ஒரு பெருமையான ராணுவ குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் தந்தை லெப்டினன்ட் கர்னல் அஜய் பிரதாப் சிங், ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றவர். அவரது தாத்தா ஆயுதப்படையில் பணியாற்றியவர். உத்தரபிரதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தனுஷ்கா, 2007-ம் ஆண்டு முதல் மங்களூருவில் வசித்து வருகிறார். தவிர, மங்களூரை தனது வீடு என மகிழ்வுடன் குறிப்பிடுகிறார்.

Jaguar Fighter Jet

படிப்பில் அர்ப்பணிப்போடு சிறந்து விளங்கிய தனுஷ்கா, சூரத்கல்(Suratkal)லில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பின், மங்களூரில் தன் கல்லூரிப்படிப்பைத் தொடர்ந்தார். கல்லூரியில் அறிவியல் ஆர்வத்தை அதிகம் வளர்த்துக்கொண்ட தனுஷ்கா, தன் நாட்டிற்கு சேவை செய்ய விரும்பி மணிப்பால் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் இணைந்தார். 2022-ல் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங்கில் பி.டெக். டிகிரி பெற்றார்.

சிறு வயதிலிருந்தே ஆயுதப்படையில் சேர விரும்பினார் தனுஷ்கா. ஆரம்பத்தில் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த இவர், விமானப்படையிலுள்ள பெண்களுக்கான வாய்ப்புகளால் ஊக்குவிக்கப்பட்டார். பின், விமானப்படையின் விமானியாகும் லட்சியத்தை மனதில் வளர்த்துக்கொண்டார். செயல்முறை தேர்வில் வென்ற தனுஷ்கா, தமிழ்நாட்டின் திண்டுக்கல்லில் உள்ள விமானப்படை அகாடமியில் தனது தீவிர பயிற்சியைத் தொடங்கினார்.18 மாத கடும் பயிற்சியில் ராணுவ விமானப் போக்குவரத்து சார்ந்த தனது திறமைகளை வளர்த்துக்கொண்டார். ஓராண்டு கால கூடுதல் சிறப்புப் பயிற்சிக்கு பின், ஹாக் எம்கே 132 ( Hawk MK 132) விமானத்தை இயக்க தேர்ச்சியானார். விரைவில் ஜாகுவார் அணியில் தனுஷ்கா நிரந்தரமாக சேரவுள்ளார். பிற பெண் விமானிகள் ஜாகுவார் போர் விமானத்தை அனுபவத்துக்காக ஓட்டியிருந்தாலும், அந்த விமானத்தை இயக்க நிரந்தரமாக நியமிக்கப்பட்ட முதல் பெண் தனுஷ்காதான்.

பயமே உணரவில்லை. இதுதான் நான் எப்போதும் விரும்பிய வாழ்க்கை என்பதை அந்த தருணத்தில்தான் உணர்ந்தேன்.

தனது முதல் விமானப் பயிற்சி அனுபவத்தை நினைவு கூர்ந்த தனுஷ்கா, "பயணத்தில் பெருமகிழ்ச்சி கொண்டேன். பயத்தை உணரவில்லை. இதுதான் நான் எப்போதும் விரும்பிய வாழ்க்கை என்பதை அந்த தருணத்தில்தான் உணர்ந்தேன். ஆயுதப்படைகளில் இணைய விரும்புவோர்க்கு தன்னம்பிக்கை, நேர்மை மற்றும் தலைமைத்துவ திறன்கள் முக்கியம் என வலியுறுத்திய தனுஷ்கா, இக்குணங்களைக் கொண்ட எவரும் தைரியமாக தனது கனவுகளை நனவாக்கத் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்’’ என்கிறார்.

பெண்கள் முன்னேற்றத்துக்கான மைல்கல்லைத் தொட்டு சாதனை படைத்துள்ள தனுஷ்காவுக்கு வாழ்த்துகள்!

வளர்ப்பு பூனை இறந்த துக்கம்; இரண்டு நாள்கள் சடலத்துடன்... 3-வது நாளில் விபரீத முடிவெடுத்த இளம்பெண்!

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ஹசன்பூர் என்ற இடத்தை சேர்ந்த பூஜா என்ற பெண் திருமணமாகி இரண்டாண்டில் விவாகரத்து செய்துவிட்டார். இதையடுத்து தனது பெற்றோர் வீட்டில் தாயாருடன் வசித்து வந... மேலும் பார்க்க

Elon Musk: தனது நிறுவன ஊழியர் சிலிஸ் மூலம் 4வது குழந்தை; 14 குழந்தைக்குத் தந்தையானார் எலான் மஸ்க்

எலான் மஸ்க் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஷிவோன் சிலிஸ் என்ற பெண் ஊழியருடன் நான்காவது குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார்.53 வயதான எலான் மஸ்க், கடந்த 2021ம் ஆண்டு தனது 'நியூரோலிங்க்' நிறுவனத்தில் பணிபு... மேலும் பார்க்க

பற்றி எரிவது அடுத்தவர் வீட்டுக்கூரைதானே என்று ஆசுவாசமாக இருந்தீர்களென்றால்... | Must Read

அடுத்தவரின் துன்பத்தைக்கண்டு நகைக்கிற இயல்பு நம் மனங்களுக்குள் எப்போது நுழைந்தது..? பாதிக்கப்பட்டவர்களின் ரணம் ஆறுமுன், 'நான் எவ்ளோ பெரிய நியாயக்காரன் தெரியுமா' என்பதை நிரூபிக்கிற அளவுக்கு இதயம் கல்லா... மேலும் பார்க்க

பனி மலையில் 10 நாள்களாக சிக்கிய இளைஞர் - டூத்பேஸ்ட் சாப்பிட்டு உயிரை காப்பாற்றிக் கொண்டது எப்படி?

பனிமலையில் பத்து நாள்களாக சிக்கிக்கொண்ட இளைஞர் ஒருவர், ஆற்று நீர், உருகிய பனி, டூத்பேஸ்ட் ஆகியவற்றை சாப்பிட்டு தன்னை உயிருடன் வைத்திருக்கிறார். எப்படி அந்த மலையில் மாட்டிக்கொண்டார், எப்படி மீட்கப்பட்ட... மேலும் பார்க்க

Vikatan Weekly Quiz: `தொகுதி மறுசீரமைப்பு சர்ச்சை டு சாம்பியன்ஸ் டிராபி' - இந்த வார கேள்விகள் இதோ..!

மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு, மகா கும்பமேளா, ரஷ்யா - உக்ரைன் போர் மூன்றாண்டுகள் நிறைவு, சாம்பியன்ஸ் டிராபி தொடர் என இந்த வார சம்பவங்கள் பல பல... அவற்றின் கேள்வித் தொகுப்பாக இ... மேலும் பார்க்க

புனே பாலியல் வழக்கு: சிக்க வைத்த ஒரு கிளாஸ் தண்ணீர்; களமிறங்கிய கிராமம்; குற்றவாளி சிக்கியது எப்படி?

புனேயில் கடந்த செவ்வாய்க் கிழமை அதிகாலையில் பேருந்திற்கு டெப்போவில் காத்து நின்ற மருத்துவமனை பெண் ஊழியர் பேருந்திற்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அப்பெண்ணிடம் தத்தாத்ரேயா ராமதாஸ் என்பவர... மேலும் பார்க்க