சூர்யா - 45: புகைப்படம் பகிர்ந்த ஆர்ஜே பாலாஜி!
நடிகர் சூர்யா - 45 படத்தின் படப்பிடிப்பு புகைப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி பகிர்ந்துள்ளார்.
நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். நீதிமன்ற வழக்கை மையமாக வைத்து படத்தின் கதை உருவாகப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில், த்ரிஷா, ஸ்வாசிகா, இந்திரன்ஸ், காளி வெங்கட், நட்டி, சிவதா உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர். படத்தை இயக்குவதுடன் ஆர். ஜே. பாலாஜி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகத் தெரிகிறது.
படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்ததும், அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது.
இதையும் படிக்க: நானியின் தி பாரடைஸ் கிளிம்ஸ்!
ஆனால், சென்னை வண்டலூரிலுள்ள வெளிச்சம் கிராமத்தில் முறையான அனுமதி பெறாமல் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் விதமாக படப்பிடிப்பு கிரேன்கள் மற்றும் வாகனங்கள் சாலையில் நிரம்பியிருந்ததால் அப்பகுதி மக்களுக்கும் படக்குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால், காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதால் தற்காலிகமாக சூர்யா - 45 படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், ஹைதராபாத்திலுள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் சூர்யா - 45 படப்பிடிப்பு துவங்கியுள்ளதை புகைப்படம் வெளியிட்டு ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார்.