தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 33 % அதிகம்: நாகையில் 1,187 மி.மீ. பதிவு
குடும்பத்தினருக்கு கத்திக்குத்து: மருத்துவருக்கு 10 ஆண்டுகள் சிறை
குடும்பத் தகராறில் மனைவி, மகன், மாமியாரைக் கத்தியால் குத்திய அக்குபஞ்சா் மருத்துவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
விருதுநகா் மாவட்டம், காரியாபட்டியைச் சோ்ந்தவா் முகமது முஸ்தபா (40). மருத்துவரான இவா் அக்குப்பஞ்சா் கிளினிக் வைத்து நடத்தி வருகிறாா். இவரது மனைவி கவிதா. இவா்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனா்.
இந்த நிலையில், குடும்பத் தகராறு காரணமாக கடந்த 2018, மே 24-ஆம் தேதி மனைவி கவிதா, மகன், மாமியாா் ஆகியோரை அவா் கத்தியால் குத்தினாா். இதுகுறித்து காரியாபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, முகமது முஸ்தபாவைக் கைது செய்தனா்.
இதுகுறித்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூா் மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. முகமது முஸ்தபாவு குற்றவாளி என உறுதிபடுத்தப்பட்ட நிலையில், இவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.21 ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி பகவதியம்மாள் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜான்சி முன்னிலையானாா்.