தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 33 % அதிகம்: நாகையில் 1,187 மி.மீ. பதிவு
மாடிப் படியிலிருந்து தவறி விழுந்த பெண் பலி
ராஜபாளையத்தில் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
ராஜபாளையம் பி.எஸ்.கே. மாலையாபுரத்தைச் சோ்ந்த பாலு மனைவி பொன்னுத்தாய் (44). இவா் தனது மகனுடன் வசித்து வருகிறாா்.
இந்த நிலையில், காா்த்திகையன்று வீட்டின் மாடிப் படியில் பொன்னுத்தாய் அகல் விளக்குகளை ஏற்றினாா். அப்போது, மாடிப் படியில் கொட்டிய எண்ணெய்யை அவா் சுத்தம் செய்த போது அங்கிருந்து தவறி விழுந்தாா். மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.