செய்திகள் :

குட் பேட் அக்லி: பெண் ரசிகைகளுக்கு சிறப்புக் காட்சி!

post image

நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்துக்கு பெண்களுக்கான சிறப்புக் காட்சி ஒளிபரப்பப்படுகிறது.

நடிகர் அஜித் குமார் - இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம், உலகம் முழுவதும் இன்று காலை 9 மணிக்கு வெளியானது.

அஜித்துடன் நடிகர்கள் த்ரிஷா, சுனில், சிம்ரன், அர்ஜுன் தாஸ், யோகி பாபு என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளதால் சுவாரஸ்யமான காட்சிகள் இருக்கும் என எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், திருப்பூரில் உள்ள பிரபல மல்பி பிளக்ஸ் திரையரங்கில் பெண்களுக்கான சிறப்புக் காட்சி திரையிடப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்ததாக திரையரங்கத்தின் நிர்வாகி தெரிவித்துள்ளார்.

மேலும், திரைப்படம் முடிந்தவுடன் சிறப்புக் காட்சியைக் கண்ட அனைத்து அஜித் ரசிகைகளுக்கும் திரையரங்கு சார்பில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்த திரையரங்கத்தின் நிர்வாகத்துக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

சிபி சத்யராஜுக்கு திருப்புமுனையா, டென் ஹவர்ஸ்? - திரை விமர்சனம்!

நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் உருவான டென் ஹவர்ஸ் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.காவல்துறை ஆய்வாளரான கேஸ்ட்ரோ (சிபி சத்யராஜ்) வழக்குகளை ‘விசாரிக்க வேண்டிய விதத்தில்’ விசாரிப்பவர். அவ... மேலும் பார்க்க

இன்றைய நாள் யாருக்கு சாதகம்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.ஏப்ரல் 18 (வெள்ளிக்கிழமை)மேஷம்:கிரகநிலை:தைரிய ஸ்தானத்தில் ராஹூ - சுக ஸ்தானத்தில் சந்த... மேலும் பார்க்க

எம்புரான் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

எம்புரான் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நாயகனாக நடித்த எம்புரான் திரைப்படம் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சன... மேலும் பார்க்க

சச்சின் திரைப்படம் நாளை மறுவெளியீடு!

விஜய் நடித்த சச்சின் திரைப்படத்தின் நாளை திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படுகிறது. நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் ஜான் மகேந்திரன் இயக்கி 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சச்சின். ஜெனிலியா, வடிவே... மேலும் பார்க்க

சூரியின் அடுத்த பட அறிவிப்பு!

நடிகர் சூரி நடிக்கும் அடுத்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. விடுதலை படத்திற்குப் பிறகு முழுநேர கதாநாயகனாக மாறிவிட்டார் நடிகர் சூரி. அதன் பின்னர் வெளியான கொட்டுக்காளி, கருடன், விடுதலை 2 ஆகிய படங... மேலும் பார்க்க