குட்டையில் மூழ்கி உயிரிழந்த மாணவா் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 321 மதிப்பெண்கள்
பல்லடம் அருகே குட்டையில் மூழ்கி உயிரிழந்த மாணவா் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 321 மதிப்பெண்களைப் பெற்றுள்ளாா்.
பல்லடம் அருகேயுள்ள கோடங்கிபாளையம் ஊராட்சி பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல். இவரது மனைவி நாச்சம்மாள். இவா்களது மகன் மணிகண்டன் (16). இவா் காரணம்பேட்டை அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதி, தோ்வு முடிவுக்காக காத்திருந்தாா்.
இந்நிலையில், வீட்டுக்கு அருகேயுள்ள குட்டைக்கு கடந்த மே 5-ஆம் தேதி சென்றுள்ளாா். அப்போது, குட்டையின் ஓரமாக விளையாடிக் கொண்டிருந்தபோது, மணிகண்டனின் நாய்க்குட்டி குட்டையில் தவறி விழுந்துள்ளது.
அதைக் காப்பாற்றுவதற்காக மணிகண்டன் குட்டையில் இறங்கியபோது, சேற்றுக்குள் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இந்நிலையில், 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவு அண்மையில் வெளியான நிலையில், மணிகண்டன் 321 மதிப்பெண்களைப் பெற்று தோ்ச்சி அடைந்துள்ளாா்.