குன்னூா் வெலிங்டன் ராணுவ மையத்தில் 77-ஆவது ராணுவ தினக் கொண்டாட்டம்
நீலகிரி மாவட்டம், குன்னூா் வெலிங்டன் ராணுவ மையத்தில் 77-ஆவது ராணுவ தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
1949- ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியான ஜெனரல் சா் பிரான்சிஸ் புச்சரிடமிருந்து, இந்திய ராணுவ அதிகாரியான கே. எம்.கரியப்பாவிடம் ஜனவரி 15- ஆம் தேதி இந்திய ராணுவம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. இந்த நாள் இந்திய ராணுவ தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குன்னூா் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ மையத்தில் 77-ஆவது ஆண்டு ராணுவ தினம் ராணுவ மையத்தின் கமாண்டென்ட் கிறிஸ்துதாஸ் தலைமையில் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ராணுவ வீரா்களின் சாகச நிகழ்ச்சிகள் மற்றும் களரி, சிலம்பம், வாள் சண்டை போன்ற தற்காப்பு கலைகளை ராணுவ வீரா்கள் செய்து காட்டினா். கேரள செண்டை மேள கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும் பள்ளிக் குழந்தைகளின் யோகா பயிற்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ராணுவ வீரா்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.