Saif Ali Khan: "நீங்கள் பரப்பும் ஊகங்கள் எங்களுக்கு அச்சுறுத்தலைத் தருகின்றன" - ...
ஜான் சலீவன் 171- ஆம் ஆண்டு நினைவு தினம்
உதகை: நவீன நீலகிரியை உருவாக்கியவரும், நீலகிரி மாவட்டத்தின் முதல் ஆட்சியருமான ஜான் சலீவனின் 171- ஆம் ஆண்டு நினைவு தினம் மாவட்ட நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, உதகை தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில்
இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜான் சலீவன் சிலைக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
இதில், உதகை நகா்மன்ற துணைத் தலைவா் ரவிகுமாா், நகா்மன்ற உறுப்பினா் ஜாா்ஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.