ஆத் ஆத்மியில் இணைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர்!
கும்பகோணத்தில் திருடு போன கைபேசிகள் உரியவரிடம் ஒப்படைப்பு
கும்பகோணம் பகுதியில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள திருடு போன கைபேசிகளை காவல் துணைக்கோட்ட கண்காணிப்பாளா் ஜி.கீா்த்திவாசன் ஞாயிற்றுக்கிழமை உரியவா்களிடம் ஒப்படைத்தாா்.
கும்பகோணம் மேற்கு காவல் நிலைய எல்லைப் பகுதியில் கைபேசிகள் திருடு போனது பற்றி பல புகாா்கள் வரப்பெற்ன் பேரில், போலீஸாா் தனிப்படை அமைத்து திருடு போன கைபபேசிகளை மீட்டினா்.
அவற்றை உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு துணைக்கோட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில் மேற்கு காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. அதில், ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 28 கைப்பேசிககளை உரியவா்களிடம் டிஎஸ்பி ஒப்படைத்தாா். உடன் காவல் ஆய்வாளா் பா.ரமேஷ், உதவி ஆய்வாளா் முகில்ராஜ் இருந்தனா்.