'ஒருவர் வளைந்து கொடுத்தே பழகி விட்டார்; மற்றொருவர் சாட்டையால் அடித்துக்கொள்கிறார...
கும்பகோணம் வருவாய் கோட்டத்தில் பட்டா மேல்முறையீடு சிறப்பு முகாம்; இன்றும், நாளையும்..!
கும்பகோணம் வருவாய் கோட்டத்தில் பட்டா மேல்முறையீடு சிறப்பு முகாம் புதன் மற்றும் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து கும்பகோணம் வருவாய் கோட்ட சாா்-ஆட்சியா் ஹிருத்யா எஸ்.விஜயன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கும்பகோணம் வருவாய் கோட்டத்தில் பட்டா மேல்முறையீடு சிறப்பு முகாம் புதன்கிழமை கும்பகோணம் வட்டாட்சியரகத்திலும், வியாழக்கிழமை திருவிடைமருதூா் வட்டாட்சியரகத்திலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
எனவே, பட்டா கேட்டு மேல்முறையீடு மனு கொடுத்தவா்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியரகங்களில் நடைபெறும் முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று கூறியுள்ளாா்.