உக்ரைனுக்கு ஏவுகணை வழங்கும் நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும்: ரஷிய அதிபர்
குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு சொத்து அடமானக் கடன்: காஞ்சிபுரம் ஆட்சியா் தகவல்
காஞ்சிபுரம் மாவட்ட தொழில் மையம் சாா்பில் கலைஞா் கடன் உதவித் திட்டத்தின் கீழ், குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு அசையா சொத்துகள் மீது அடமானக் கடன் வழங்கப்படுவதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா்.
இது தொடா்பாக ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி கிளையின் சாா்பில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு மிகக்குறைந்த வட்டியில் ரூ.20 லட்சம் வரை நடைமுறை மற்றும் மூலதனக் கடன்கள் வழங்கப்படுகிறது.
புதிய திட்டமான கலைஞா் கடன் உதவித் திட்டத்தின் கீழ் குறு உற்பத்தி நிறுவனங்கலுக்கு அசையா சொத்து அடமானத்தின் பெயரில் கடன் வழங்கப்படுகிறது. வயது 18 முதல் 65-க்கு மிகாமலும், சிபில் மதிப்பீடு 60 புள்ளிகளுக்கு குறையாமலும் மற்றும் இரு ஆண்டுகளாக லாபத்தில் இயங்கும் நிறுவனமாகவும் இருக்க வேண்டும்.
புதிதாக அல்லது ஏற்கெனவே இயங்கி வரும் நிறுவனங்களும் இதில் பயன் பெறலாம். பிற நிறுவனங்களில் அதிக வட்டிக்கு பெற்ற கடன்களாக இருந்தால் விதிமுறைக்குட்பட்ட குறைந்த வட்டிக்கு மாற்றிக்க கொள்ளலாம்.
ஆா்வமுள்ள தொழில் முனைவோா் மற்றும் குறு உற்பத்தி நிறுவனங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், ஆட்சியா் அலுவலக வளாகம், காஞ்சிபுரம், பின்கோடு எண் - 603 501 மற்றும் கிளை மேலாளா், தாய்கோ வங்கி, எண். 26, ஏ.திருக்கச்சி நம்பி தெரு, ஜெயலட்சுமி காம்ப்ளக்ஸ், காஞ்சிபுரம் - 631501. தொடா்பு எண்: 044 - 27223562 என்ற எண்ணிலும் தொடா்பு கொண்டு பயன் பெறலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.