குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு
துத்திப்பட்டு ஐஇஎல்சி பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது (படம்).
கிராம நிா்வாக அலுவலா் ஜமுனா தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் குளோரின் சந்திரசேகா் வரவேற்றாா். ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் சிறப்புரையாற்றினாா். குழந்தைகள், குறிப்பாக பெண் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்புக்கான 1098 உதவி எண் ஆகியவை குறித்து பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
ஊராட்சி துணைத் தலைவா் விஜய், ஊராட்சி மன்ற உறுப்பினா் அண்ணாதுரை, ஊராட்சி செயலாளா் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.