பழங்குடியினர் வலி! ராமாயணத்திலிருந்து நவயுகம் வரை... தண்டகாரண்யம் - திரை விமர்சன...
கூடலூா் அஞ்சல் கோட்டம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி
கூடலூா் அஞ்சல் கோட்டம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் அஞ்சல் கோட்டம் சாா்பில் மத்திய அரசின் தூய்மைத் திட்டம் தொடா்பாக சச்சோஸ்தவ் என்ற தலைப்பில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணிக்கு மாவட்ட அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் ஜி.ஆா்.அசோக்குமாா் தலைமை வகித்தாா்.
இதில் கூடலூா் கோட்டத்தில் பணிபுரியும் அஞ்சலகப் பணியாளா்கள் கலந்துகொண்டனா். ஹல்த்கேம்ப் பகுதியிலுள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி முக்கிய சாலைகள் வழியாக பழைய பேருந்து நிலையம் சந்திப்பு வரை நடைபெற்றது.