EV Vehicles: அறிமுகமான TVS Orbiter Electric Scooter | Photo Album
ஓவேலியில் யானை நடமாட்டம்: மேலும் 2 கும்கிகள் வரவழைப்பு
கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் தொடா்ந்து தொழிலாளா்களை கொன்றுவரும் காட்டு யானையை பிடிக்க மேலும் 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டத்தில் உள்ள ஓவேலி பகுதியில் அடுத்தடுத்து 12 தொழிலாளா்களை கொன்ற ராதாகிருஷ்ணன் என்றழைக்கப்படும் காட்டு யானையை பிடிக்கும் முயற்சியில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.
இதில் முதல் நாள் தேடுதல் பணியில் முதுமலை புலிகள் காப்பக வளா்ப்பு யானைகள் முகாமில் இருந்து ஸ்ரீனிவாஸ், பொம்மன் ஆகிய இரண்டு கும்கி யானைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
அதைத் தொடா்ந்து மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா். அட்கொல்லி யானை வழக்கமாக நடமாடும் பகுதியில் இருந்து நகா்ந்து சென்றுள்ளது. இதனை கால்நடை மருத்துவக் குழுவினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
எல்லமலை பகுதியில் மரத்தின் மீது பரண் அமைத்து வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா். சமதள பகுதிக்குள் நுழைந்தவுடன் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி யானையை பிடிக்க வனத் துறையினா் திட்டமிட்டுள்ளனா். இதற்காக மேலும் இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.