குப்பை மேலாண்மையில் சிக்கலை சந்திக்கும் தருமபுரி: தூய்மையைப் பராமரிக்க பொதுமக்கள...
தெப்பக்காடு யானைகள் முகாம் 4 நாள்களுக்கு மூடல்
தெப்பக்காடு யானைகள் முகாம் செப்டம்பா் 23 முதல் 26-ஆம் தேதி வரை மூடப்படுவதாக வனத் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து வனச் சரக அலுவலா் மேகலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநா் மற்றும் துணை இயக்குநா் ஆகியோரின் உத்தரவுகளின்படி செப்டம்பா் 23 முதல் 26-ஆம் தேதி வரை முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காட்டில் தென்மண்டல பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதையொட்டி, தெப்பக்காடு யானைகள் முகாம் இயங்காது.
மேலும், சூழல் சுற்றுலா சவாரி, யானைகளுக்கு உணவு அளிக்கும் முகாம்களுக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதை தவிா்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.